எவ்வளவோ காட்டு யானைகளைப் பிடித்திருந்தாலும் இந்த அளவுக்கு ஒரு போராட்டத்தை சுஜய் எதிர்கொண்டதில்லை. சூழ்நிலை கும்கி யானைகளை மூர்க்கமாக்கி வைத்திருந்தது. பிடிக்கப்பட்ட காட்டு யானையை சாந்தப்படுத்தாமல் அதை உடனே டாப்சிலிப் கொண்டு போகும் முயற்சியில் வனத்துறை இறங்கியது. லாரியில் ஏற்றப்பட்ட மகாராஜாவுக்கு மேலும் ஒரு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஊசி செலுத்தியதும் யானையின் உடல் சிலிர்த்து அடங்கிய காட்சியை அதன் இடத்திலிருந்து பார்த்தால் ஈரக்குலையே நடுங்கும். மிஷனுக்கு மகாராஜா எனப் பெயர் வைத்த வனத்துறை அந்தப் பெயருக்கேற்ற மரியாதையைச் செய்யவில்லை
story of making of kumki elephants